சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
இதனையடுத்து சிபிசிஐடி போலீசாரின் தீவிர சோதனையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், செங்கல்பட்டு சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபா மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே இன்று காலை முதல் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த பெண் பக்தர்கள் சுஷ்மிதா, நீராஜ் கருணாவிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுஷ்மிதா பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்துச் சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவர் சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவி, இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பிறகும் சிவசங்கர் பாபா பக்தராக அங்கேயே பணிபுரிந்து, குடும்பத்துடன் தங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.