தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50%, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 20% மதிப்பெண், 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு அக மதிப்பீட்டில் இருந்து 30% மதிப்பெண் ஆகியவை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 22ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
மேலும் மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் தேர்வு எழுதிக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 8 ,16, 473 என்று குறிப்பிட்டுள்ளார்.