ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது தமிழக அரசு. அதே சமயம், 27 மாவட்டங்களுக்கு தளர்வுகளும் 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் , இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி.
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்படலாம்.
கொரோனா பரவல் அதிகம் இருக்கும் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தகக்கடைகள் இயங்க அனுமதி
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு தொடரும்
சென்னையில் தொற்று குறைவதால் 27 மாவட்டங்களில் சென்னையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பதிவு பெற்று வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகளும் செல்ல அனுமதி.
தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
– மூவேந்தன்