புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

SHARE

பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதிப்பெயர்களை நீக்கி அவர்களின் அடையாளத்தை அரசு சிதைக்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாடப் புத்தகங்களிலும், மற்ற நூல்களிலும், தலைவர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சமீபத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

அதில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன.

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் என்பதற்கு பதில் உ.வே. சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரை தமிழக அரசு நீக்கியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும் எனக் கூறியுள்ளார். தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்குக – பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

Admin

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Admin

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

எச்சில் தொட்டு, வாயால் ஊதி உறைகளைப் பிரிக்கக் கூடாது: சுகாதாரத்துறைச் செயலர் எச்சரிக்கை

Admin

ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

Leave a Comment