ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவபரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில். அங்கு பரிசோதனை முடித்து விட்டு கடந்த 09 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பினார்.
தற்போது ரஜினிகாந்த் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் ரஜினி தரப்பினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், வரும் ஜூலை 12 ஆம் தேதி தன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சென்னையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி ரசிகர் மன்றத்தினர் பலரும்வேறு கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில் ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்