காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியயில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது சிறுமியை மதகுருவும், இடுகாட்டில் பணியாற்றி வரும் 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் உடலைப் பெற்றோருக்குத் தெரியாமல் எரித்துவிட்டனர்.
இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியுவினை உலுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி .
அந்த குடும்பத்தின் புகைப்படத்தை தனது டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து,தலித் குடும்பத்தின் மகள் இந்த தேசத்தின் மகளும்கூடஎன பதிவிட்டிருந்தார்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளத்தை புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்தியதாக அவரது பதிவை ட்விட்டர் இந்தியா நிறுவனம் நேற்று ந நடவடிக்கை எடுத்தது.
ஆகவே ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது.
இதுகுறித்துஅக்கட்சி வெளியிட்டிருக்கும் ட்வீட்டர் பதிவில் ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் மறுசீரமைப்பு செய்ய உரிய செயல்முறை பின்பற்றப்படுகிறது.
அதுவரை, அவர் தனது மற்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பார். நமது மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார். ஜெய் ஹிந்த்!” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரசில் முக்கிய தலைவராக இருக்கும் ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது
ராகுலின் கணக்கை முடக்கிய ட்விட்டர்: காரணம் என்ன?