குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ளது வெலவாடர் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் முழுக்க முழுக்க அழிந்துவரும் மானினமான பிளாக்பக் மான்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
வெலாவாடர் ப்ளாக்பக் தேசியப் பூங்காவில் உள்ள சாலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் துள்ளிப்பாயும் மான்களின் வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மான்கள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை குஜராத் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் பகிர்ந்திருந்த நிலையில், பிரதமர் மோடி அதனை ரீ- ட்வீட் செய்துள்ளார்.
அது குறித்து அவர் ‘எக்ஸலன்ட்’ என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 3000 மான்கள் இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் ஏற்கெனவே தனது ட்விட்டர் பக்கத்தில் மயிலுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். இந்நிலையில், அவர் தற்போது ஷேர் செய்துள்ள இயற்கையின் வரத்தின் சாட்சியான காட்சி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.