கேரளா முதல்வராக பினராயி விஜயன் 2ஆவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில் எல்டிஎப் கூட்டணி மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மீதமுள்ள 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி வென்றது.
இதனால் மீண்டும் பினராயி விஜயன் முதல்வராவது உறுதியான நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 18 நாட்கள் கழித்து, இன்று மாலை 3.30 மணிக்கு கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருடன் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவுக்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்