பிரான்ஸ் நட்சத்திர கால்பந்து வீரர் பீர் பாட்டிலை அகற்றுமாறு யூரோ கோப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பின்போது தன்முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றிவிட்டு, தண்ணீர் குடிக்குமாறு, போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கூறியது இணையத்தில் வைரலானது.
அதனால் அந்நிறுவனத்திற்கு சுமார் ரூ.29,377 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரான்ஸ் நட்சத்திர வீரரான பால் போக்பா தன்முன் வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலை அகற்றுமாறு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் பால் மதுவுக்கு எதிரானவர் என்பதால், யூரோ கோப்பை ஸ்பான்ஸர் நிறுவனமான ஹெனிக்கன் நிறுவனத்தின் பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்