அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போடியில் போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளதாக அதே தொகுதி வாக்காளர் மிலானி வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் சேப்பாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி வைப்புத்தொகை விவரத்தை வெளியிடவில்லை என கூறி ரவி என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் சொத்து மதிப்பு குறைத்து காட்டியதற்கான ஆவணங்களை மிலானி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் வைப்புத்தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க ரவி தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இவ்விறு வழக்குகளும் ஆகஸ்ட் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றன.