நைஜீரிய அதிபரின் ட்வீட்டை நீக்கியதற்கு பதிலடியாக ட்விட்டருக்கு தடை விதித்துள்ளது நைஜீரியா.
ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டின் அதிபராக முகம்மது புஹாரி பதவி வகித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அங்கு அரசுக்கு எதிராக அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் அதிபர் முகம்மது புஹாரி தனது ட்விட்டர் பக்கத்தில் 1967-1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அரசுக்கெதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்களுடன் களத்தில் இருந்தவர்கள், போரை சந்தித்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே நடத்துவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அதிபரின் இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்த தூண்டுவது போல அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதனால் ட்விட்டர் நிறுவனம் அதிபர் முகம்மது புஹாரியின் பதிவை நீக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த அதிபர் முகம்மது புஹாரிநைஜீரியாவில் ட்விட்டர் செயல்பட தடை விதித்துள்ளார். நைஜீரியாவில் ட்விட்டர் செயல்பட காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– மூவேந்தன்