திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – ஹால் டிக்கெட் வெளியீடு

SHARE

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.

கொரோனா காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்கள் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆகவும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சிபிஎஸ்இ தொடர்பான மற்ற தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால் ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை ஒத்திவைக்க முடியாது.

இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். திட்டமிட்ட தேதியில் நீட் தேர்வு கட்டாயம் நடந்தே தீரும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நீட் தேர்வு ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹால் டிக்கெட்டுகளை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

துணை ஜனாதிபதி கணக்கில் ப்ளூ டிக்கினை நீக்கிய டுவிட்டர்.. காரணம் என்ன?

Admin

மும்பையினை புரட்டி போட்ட கனமழை .. 17 பேர் உயிரிழப்பு!

Admin

நீக்கப்படும் எடியூரப்பா… போர்க்கொடி தூக்கும் லிங்காயத்து மடாதிபதிகள்

Admin

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

Admin

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி… டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

கணவனே கண்கண்டதெய்வம்..கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி.!!

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

அடேங்கப்பா.. இவர் பெயர் இருந்தாலே போதும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசம்!

Admin

இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

Leave a Comment