டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 32வது ஒலிம்பிக் தொடரின் தடகள பிரிவு போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார்.
இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து முதலிடத்தை பிடித்து நீரஜ் சோப்ரா தங்கபதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் 100 ஆண்டுகளுக்கு பிறகு தடகள போட்டியில் இந்தியா முதல் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.
அதேபோல் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.