பொது இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்து உள்ளார்.
சென்னை.
கோரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க, ஆவி பிடிப்பது மிக சிறந்த தீர்வு என சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. இதனை பலர் பின்பற்றவும் செய்கின்றனர். ஆனால், பொது இடங்களில் இதனை செய்தால் நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பலர் பொது இடங்களில் ஆவி பிடிக்கின்றனர். பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு தொற்று உங்களுக்கு வர வாய்ப்புள்ளது. இதனை நாம் ஊக்குவிக்கக் கூடாது’ – என்றும், ஆவி பிடித்தல் போன்ற சுய வைத்தியங்களை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மக்கள் செய்ய வேண்டாம் என்றும் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
– கெளசல்யா அருண்