கொங்குநாடு குறித்த பாஜகவின் பேச்சுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கடும் கண்டனத்தையும் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கொங்குநாடு குறித்த கேள்வியினை செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் கூறிய அவர்,அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என கூறினார். மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம் என்றும் இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்