கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

SHARE

ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அகமதாபாத்

டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் செய்யத் தீர்மானித்தது. கொல்கத்தா அணியினர் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் களம்  இறங்கினர். பஞ்சாப் அணியில் மட்டும், ஆலனுக்கு மாற்றாக கிறிஸ் ஜோர்டன் களம் இறங்கினார். 

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் அகர்வால் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அடித்து ஆடவேண்டும் என்று கம்மின்ஸின் முதல் ஓவரிலேயே தெர்டு மேன் பக்கம்  ஒரு சிக்ஸர், கீப்பர் பின்னாடி ஒரு பவுண்டரி என்று அடிக்க ஆரம்பித்தனர். அடுத்து மாவியின் பந்துக்கும் மிட் ஆஃப் ஏரியாவில் ஒரு பவுண்டரி. அடுத்து நரைனின் பந்துக்கும் ஒரு பவுண்டரி என்று நன்றாகவே விளையாடினார்கள். பின்னர் எப்படியாவது விக்கெட் எடுத்தாக வேண்டும் என்று மீண்டும் வந்த மாவியின் பந்து, தெர்டு மேன் பக்கம் பவுண்டரி அடிக்க போய் கேட்ச் ஆனதில், கேஎல் ராகுலின் விக்கெட் போனது. பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் என்ற நிலையில் இருந்தது பஞ்சாப். 

இருந்தாலும் பரவாயில்லை கெயில் இருக்கிறார் என்று நம்பி இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. வந்த வேகத்தில் கோல்டன் டக் ஆகி கிளம்பினார் கெயில். ஹூடா, பூரன் என்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. மிடில் ஆர்டர்  பேட்ஸ்மேன்களின் ஆட்டம் பஞ்சாப் அணிக்கு ஒத்துவரவில்லை என்றே சொல்ல வேண்டும். அடுத்து அகர்வாலுக்கு குறிவைத்தது ரஸல், கிருஷ்ணா பந்துகளை வீச, நான் பார்த்துக் கொள்கிறேன் என பந்து வீசினார் நரைன், மிட் விக்கெட் ஏரியாவில் கேட்ச் ஆனார் அகர்வால். அடுத்து வந்த ஹென்றிக்ஸும் போல்ட் ஆனார். அடுத்த ஓவரிலேயே பூரனும் அதே போல் போல்ட் ஆகி சென்றார். அடுத்து ரசிகர்கள் நம்பி இருந்த ஷாருக்கும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி சென்றார். இறுதியில், மூன்று சிக்ஸர் ஒரு பவுண்டரி என 123 ரன்களோடு ஆட்டத்தை முடித்து வைத்தார் ஜோர்டன். 

124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குக்கு ஆட வந்தனர், கில் மற்றும் ராணா. ஆட்டத்தை சீக்குரமே முடித்து விட வேண்டும் என்று ஆடியது போல் இருந்தது கொல்கத்தா அணியின் பேட்டிங். கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், ஆட்டம் எப்போதோ முடிந்திருக்கும். ஹென்றிக்சின் முதல் பந்துக்கே பவுண்டரி அடித்தார் ராணா. அதே ஓவரில் அவரின் ஃபுல் டாஸ் பாலுக்கும் பவுண்டரி அடிக்க முயற்சி செய்து, கேட்ச் ஆனது ராணா விக்கெட். முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட். மூன்றாவது ஓவரில் ஷமியின் பந்தில் எல்பிடபிள்யூவில் வெளியேறினார் கில். அடுத்து வந்த நரைனும்,  பவுண்டரிக்கு தூக்க, பந்து டீப் மிட் விக்கெட் பக்கம் சென்று கேட்ச் ஆனது. ஆனால் மோர்கன் மற்றும் த்ரிப்பாட்டி பொறுமையாக விளையாடி ரன்களை குவித்தனர்.  போராத காலம், 32 ரன்களை எடுத்தநிலையில் ஹூடாவின் பந்தில் அவுட்டாகி சென்றார் த்ரிப்பாட்டி.

அடுத்து வந்த ரஸலை மிகவும் எதிர்ப்பார்த்தனர் ரசிகர்கள். ஷமி மற்றும் ஜோர்டனின் பந்தில் பவுண்டரிகளை தட்டி விட்டு கெத்து காட்டினார் ரஸல். ஆனால் அடுத்த ஓவரில் பிஷ்னோய் பந்தில், ரன் அவுட்டாகினார் ரஸல். அடுத்து தினேஷ் கார்த்திக்கோடு கை கோர்த்து சற்று நிதானமாக பந்துகளை பார்த்து ஆடினர் இருவரும். ஹூடா பந்தில் பவுண்டரி, சிக்ஸர்களை தட்டி விட்டார்கள். 17 வது ஓவரில் தினேஷ் கார்த்திக், மிட் ஆஃப் ஏரியாவிலும், மிட் விக்கெட் திசையிலும் அழகாக 2 பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை முடித்தார்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

8 சிங்கங்களுக்கு கொரோனா!

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

உடல் எடையை குறைக்க ஈட்டி எறிய தொடங்கிய நீரஜ் சோப்ரா… தங்கம் வென்ற வெற்றி வரலாற்றின் பின்னணி …!

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

Leave a Comment