அமெரிக்காவில் இருந்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக குஷ்பூ புகார் அளித்துள்ளார்.
தமிழில் பிரபல நடிகையான குஷ்பூ முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ட்விட்டர் கணக்கில் குஷ்புவினை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை முடக்கி பெயரை மாற்றியதுடன், அதில் இருந்த அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தனது ட்விட்டர் கணக்கை கடந்த 3 நாட்களாக பயன்படுத்த முடியவில்லை என்றும் அமெரிக்காவில் இருந்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும் குஷ்பூ சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இவ்வாறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டியுள்ளார்.