தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொங்குநாடு முழக்கத்தை பாஜக முன்னெடுத்திருக்கும் நிலையில், கைலாசா நாட்டிற்கு தனி யூனியன் பிரதேசமாக்க ஐ.நா.சபை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்கில் சிக்கி பிரபலமான சாமியார் நித்யானந்தா தப்பி ஓடி கைலாசா என்ற தனி தீவை உருவாக்கி இணையம் வழியாக தனது பக்கதர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றார்.
அவ்வப்போது அவரது வீடியோவில் பரபரபான விஷயங்களை கூறி அதிர்ச்சி கொடுப்பார் சாமியார் நித்யானந்தா அந்த வகையில் தற்போது கைலாசா நாட்டுக்கு ஐ.நாவின் அங்கீகாரம் வாங்கவும் நித்தியானந்தா முயற்சித்து வருவதாக கூறியிருந்தார்.
தற்போது அந்த கைலாசாதீவுக்கு யூனியன் பிரதேசம் என ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவரது பக்தர்கள் தகவல் பரப்பி வருகின்றனர்.
ஐ.நாவின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டினை அங்கீகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது உண்மைதான் என்று சொல்லும்படியாக வெளிவந்திருக்கிறது நித்தியானந்தாவின் வீடியோ.
அந்த வீடியோவில் விவேகானந்தர் விரும்பினார், யோகா நந்தரும் இயங்கினார்.
அரவிந்தர் வாழ்வெல்லாம் முயற்சித்தார், சதாசிவன் செய்து முடித்தார். சதாசிவன் அருளால் இப்போது நித்தியானந்தன் நிறைவேற்றி இருக்கிறார்என்று குறிப்பிட்டிருக்கிறார்.