அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் விண்வெளி சுற்றுலா திட்டத்தில் வடிவமைத்த நியூ ஷெப்பர்டு ராக்கெட் இன்று விண்ணிற்கு சென்று பூமிக்கு திரும்பியது.
அமேசான் நிறுவனரான ஜெப் பெசாஸ் விண்வெளி சுற்றுலா பயண திட்டத்திற்காக புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்தைச் சேர்ந்த விண்வெளி பொறியாளர்கள் ‘நியூ ஷெப்பர்டு’ என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளனர்.
இதில் ஜெப் பெசாஸ் மற்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேர் விண்வெளிக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தனர்.
இதன்படி இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டது நியூ ஷெப்பர்டு ராக்கெட் .
அவருடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது மூதாட்டி வேலி பங்க், 18 வயது இளைஞரான ஆலிவர் டேமன் ஆகியோரும்சென்றனர்.
10 நிமிடம் நீடித்த பயணம் கேப்ஸ்யூலை விண்ணுக்கு அனுப்பிய பின் இந்த ராக்கெட்டும் பாதுகாப்பாக திரும்பி வந்தது.