நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு “கூ” செயலி தனது பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புஹாரி பதவி வகிக்கிறார்.சமீபத்தில் இவர் நைஜீரியாவில் 1967 முதல் 70 வரை நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி இந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தள நிறுவனமான கூ, நைஜீரியாவில் கால்பதித்து, ட்விட்டர் போன்ற தகவல் தொடர்பு சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்