ஒரு காலத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடுவதற்காக அமைக்கபட்டதாக இருந்த இந்து மகா சபாக்கள். விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்வதற்காக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்
சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவர் இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் மீது புகார் அளித்திருந்தார்.
அவர் புகார் மனுவில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடவும் ஸ்ரீகண்டனுக்கு ரூபாய் 14 லட்சம் கொடுத்ததாகவும்
ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் ஸ்ரீகண்டன் மிரட்டலில் ஈடுபட்டதாக தனது புகாரில்கூறியிருந்தார்
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார் ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகண்டன் தாக்கல் செய்த மனுவானது நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக காவல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீகண்டன் மீது ஏற்கெனவே 4 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஸ்ரீகண்டன் மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் ஒரு காலத்தில் இந்து மகாசபா என்பது திருவாசகம் தேவாரம் பாசுரங்களை பாடுவதற்காக அமைக்கப்பட்டு இருந்ததாகவும் தற்போது இந்து மகாசபா விநாயகருக்கு பணம் வசூல் செய்வதற்காகவே உள்ளதாக வேதனை தெரிவித்தார்