இங்கிலாந்தின் முன்னாள் இளவரசர் ஹரி தனது வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை 4 பிரிவாக வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள எலிசபெத் மகாராணியின அரச குடும்பம் உலக அளவில் புகழ்வாய்ந்தது.
பல உலக அரசியல் நிகழ்விலும் இந்த குடும்பத்திற்கு பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக குடும்பம் சொன்னாலே பிரச்சினை இருக்கும் அல்லாவா அந்தவகையில் இளவர்சர் ஹரிமேகன் தம்பதியினர் அரச குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்கின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந் மகாராணியின் பேரனும் இளவரசருமான ஹரி அவரது வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புத்தகத்தினை ஒரு பெரும் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புத்தகம் நான்கு பாகங்களாக வெளியிட உள்ளதகாவும் அதில் முதல் புத்தகம் அடுத்த ஆண்டும், 2வது புத்தகம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னரும் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் அதே நிறுவனத்துடன் இணைந்து ஹரியின் மனைவி மேகணும் புத்தகம் வெளியிடவுள்ளார்.
சமீபத்தில் சிறுவர்களுக்கு என அவர் எழுதிய புத்தகம் மக்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் ஹரி தமது வாழ்க்கை தொடர்பான சம்பவங்களை புத்தகங்களாக வெளியிட 29 மில்லியன் பவுண்டுகளுக்கு முடிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி? ஒன்றுதான் ,புத்தகத்தின் 2 வது பகுதி ஏன் மகாராணியார் மறைவுக்குப் பின் வெளியிடப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு வேளை புத்தகத்தில் இங்கிலாந்த் ராணி பற்றி ரகசிய தகவல்கள் உள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.