கோவி.லெனின் எழுதிய ’வி.பி.சிங் 100’ – நூல் மதிப்புரை

SHARE

இந்தப் புத்தகம் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் வாழ்க்கை குறித்த முக்கிய அம்சங்களை 100 சிறிய குறிப்புகளாகச் சொல்கிறது. எழுத்தாளர், பத்திரிகையாளர் கோவி.லெனின் இதனை எழுதிருக்கிறார்.

வி.பி.சிங்கை  மண்டல் கமிஷனின் நாயகராக சமூக நீதித்தளத்தில் அறிந்தோம். இப்புத்தகத்தைப் படிக்கும்போது அவர் ஒரு பேரன்புள்ள மனிதராகவும் புரிந்து கொள்ளப்படுவார். வி.பி.சிங்கை இந்த நூல் வாயிலாக கவிதை எழுதுபவராக, ஓவியம் வரைபவராக  அறிந்தது எனக்கு புது அனுபவம்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களுடன் வி.பி.சிங் அவர்களுக்கு இருந்த நட்பின் ஆழம் இந்நூலில் பேசப்பட்டுள்ளது. பதவியில் இருந்த 11 மாதமும் சமூகநீதி காத்த தலைவராக வி.பி.சிங் இருந்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் ஒரு பெரியாரியவாதியாக வாழ்ந்த வட இந்தியர் என்று நாம் வி.பி.சிங்கைத் தாராளமாகக் கூறலாம்.

பதவி தன்னைத் தேடி வந்த போதும் “பதவி வேண்டாம்” எடுத்த முடிவில் உறுதியாய் இருந்திருந்தார் வி.பி.சிங், அதனால் ஹரியானா  ரிசார்ட்டில்  பதுங்கி இருந்தார் என்பதை எல்லாம் அறியும் போது ஆச்சரியமாக உள்ளது.

இதையெல்லாம் படித்து முடித்ததும் உத்திரப்பிரதேசத்தில் அவர் இன்னும் சில காலம் பதவியில் இருந்திருந்தால் அந்த மண்ணும் சமூக நீதி மண்ணாக உருவெடுத்திருக்கும் என நான் நினைத்துக் கொண்டேன்.

ரதயாத்திரையை உ.பி.க்குள் வர விடாமல் தடுத்த வீரர், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் எந்தப் பதவியிலும் இல்லாத நிலையிலும் நாட்டைக் கலவரத்திலிருந்து மீட்க உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் – என்று அதிரடி ஆட்டம் ஆடிய அரசியல் தலைவரின் வரலாறுதான் இந்த நூல்.

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் கதைக்கெல்லாம் பதிலாக இவர்போல் உண்மையான சூப்பர் மேன்களை குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். அனைவரும் படிக்க வேண்டிய எளிமையான புத்தகம் இது.

  • லோகநாயகி (முகநூல் பதிவு)

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

ஒடுக்கப்பட்ட பெண்மையின் கதை சொல்லும் ‘தவ்வை’ நாவல் – நூல் மதிப்புரை

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்சிகளுக்கு அப்பால்’ – நூல் மதிப்புரை.

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் – நூல் மதிப்புரை:

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

Leave a Comment