சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 49 இடங்களில் மக்கள் இலவசமாக WiFiவசதியை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரிப்பன் கட்டிட வளாகத்தில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்திலிருந்த படியே, இணைய வழி சாதனங்களை பயன்படுத்தி, அதிகாரிகள் மாநகரை கண்காணிக்கவும், பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்களை அறியவும், அவசர காலத்தில் கட்டுப்பாடு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் வாயிலாக பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக WiFi சேவை வழங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்