ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் காலசூழ்நிலை காரணமாக ஜெர்மனியில் ‘பீட்சா டெலிவரி’ செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
ஆப்கானிஸ்தானில் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக சையது அகமது சதாத் பணியாற்றியவர் .
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிபருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்பு இவர் ஆப்கானிஸ்தானை விட்டும் வெளியேறினார். பின் ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் சக்சோனி மாகாணத்தில் உள்ள லெய்ப்சிக் நகரில் தஞ்சமடைந்தார்.
அவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து டெலிவரி பாய் வேலையை பார்த்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. பீட்சா டெலிவரி செய்ய அவர் சைக்கிளில் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பணம் இல்லாத காரணத்தால் டெலிவரி பாய் வேலையில் சேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுநிலை பட்டங்களை பெற்றுள்ள சையது சவுதி அரேபியா உள்ளிட்ட 13 நாடுகளில் தகவல் தொடர்புத் துறையில் 23 ஆண்டுகள் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.