நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல பிப்ரவரி முதல் மே மாதம் வரை பழனிசாமி தனது பணிகள் செய்ய மறந்துவிட்டார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த வரவு செலவு தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் பேசிய முதலவர் மு.க.ஸ்டாலின் மார்ச் மாதம் தொடங்கி மேஆம் 2 தேதி வரை தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பிற்கு அ.தி.மு.க. அரசே காரணம் என கூறினார்.
மேலும், பிப்ரவரி 26 முதல் மே 6-ந் தேதி வரை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அ.தி.மு.க. அரசு மறந்துவிட்டதா? கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டவில்லை.
ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இருந்துவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல் எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டு பேசுவதாக அ.தி.மு.க. அரசை விமர்சித்தும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.