டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது குடும்பத்தார் புகைப்படத்தை வெளியிட்டதால் ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை ராகுல் காந்தி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் ராகுல் காந்தியின் பக்கத்தை முடக்கியது. ஆனால் பேஸ்புக் நிறுவனம் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பேஸ்புக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் பதிவை உடனடியாக நீக்க கோரி பேஸ்புக் நிறுவனம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.