கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் இச்சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் ஒரு சிலருக்கு பூஞ்சை நோய்களின் தாக்கம் ஏற்பட்டது.
கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் புஞ்சை என மூன்று வகைப் பூஞ்சைகளின் தாக்கங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள், நெடுங்காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் ஆகியோர் பூஞ்சைத் தாக்குதலுக்கு எளிதில் இலக்காவதாகக் கூறப்படுகிறது.
இவற்ரில் கருப்புப் பூஞ்சையின் தாக்கமே அதிகம் கண்டறியப்பட்டு உள்ளன. பல மாநிலங்கள் கருப்புப் பூஞ்சையை கொள்ளை நோயாக அறிவித்து உள்ளன. கருப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆம்போடெர்சின் – பி என்ற மருந்து பயன்படுத்தப்ப்ட்டு வருகின்றது.
கருப்புப் பூஞ்சை மருந்துக்கான தேவை தினசரி அதிகரிப்பதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தா ஜெனிடிக் லைஃப் சைன்ஸ் – என்ர நிறுவனம் கருப்பு பூஞ்சைக்கான மருந்தைத் தயாரித்து உள்ளது.
இந்த மருந்து வரும் மே 31 முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும் அதன் விலை 1200 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து முதல்கட்டமாக மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் எனவும், பின்னர் கருப்பு பூஞ்சை நோய் அதிகம் உள்ள குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் எனவும்அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- பிரியா வேலு