உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

SHARE

சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி, அகரம்,  மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் இதுவரை 6 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. 7ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அகரம் அகழாய்வு தளத்தில் 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஒரு குழியில் 15 சுடுமண் உறைகள் கொண்ட 15 அடி உறைகிணறும், மற்றொரு குழியில் 8 சுடுமண் உறைகள் கொண்ட 8 அடி உறைகிணறும் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது 3வது உறைகிணற்றை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக தெரிவித்துள்ளனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்.. முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சம் வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்

Admin

உதடுகள் ஒட்டும் குறளும் ஒட்டாத குறளும்…

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

கீழடி அகழாய்வில் கிடைத்த குத்துவாள்..!!

Admin

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

Leave a Comment