ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று இரவே நாடு திரும்பும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
ஆப்கானில் தலிபான்கள்ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் படி, இன்று மாலை 7 முதல் 8 மணிக்குள் அந்த விமானம் டெல்லி வந்துவிடும் என கூறப்படுகிறது.
விமானத்தில் அனைத்து இருக்கைகளையும் நிரப்பப்பட்டு, முடிந்தவரை எத்தனை பேரை விமானத்தில் ஏற்ற முடியுமா, அத்தனை பேரையும் அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் வான் வழிகளில் ஏதேனும் பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், வரக்கூடிய பாதை ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்த ஒரு விமானம் மட்டுமல்லாமல், வரக்கூடிய இரண்டு, மூன்று நாட்களுக்கு அங்க இருக்கக்கூடிய இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கு, மேலும் விமானங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை கைபற்றிய தலிபான் அமைப்பினர் முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.