சூப்பர் சண்டேவில் சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி…

SHARE

சூப்பர் சண்டேனா அது நேத்து தான். ஐபிஎல் மேட்ச் எப்பவும் தெறிக்க விடும், ஆனா நேத்து நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மேட்ச்ல மூச்சையே நிக்கவைக்குற அளவுக்கு கொண்டு போயிட்டாங்க. 

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்க தேர்வு செஞ்சாங்க. கொல்கத்தா அணில எந்த மாற்றமும் இல்லை, சென்னை அணில ப்ராவோக்கு பதிலா சாம் கரன கொண்டு வந்திருந்தாங்க.

கொல்கத்தா அணி ஆரம்பத்துலயே அதிரடி காட்டுனாங்க… ஆனா விதி யார விட்டது? முதல் ஓவர்லையே சஹரோட பந்துல தடுமாறின கில் அடுத்த ஓவருக்கு எல்பிடபிள்யூனு வெளியேறினாரு. அடுத்த சென்னை அணியோட டார்கெட்டா இருந்தது வெங்கடேஷ் தான், பவர்பிளேவோட கடைசி ஓவருக்கு வந்த தாக்கூர் அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப்ல போட, அது பேட்டில் பட்டு எட்ஜாகி தோனிக்கு போக அவுட்டானாரு வெங்கடேஷ். அப்பாடா என்றிருந்தது சென்னைக்கு. 

அடுத்து மோர்கனுக்கு குறி வைக்க ஹசில்வுட் சிறப்பாக செய்து முடித்தார். அடுத்து திரிப்பாட்டிக்காக ஜடேஜாவை இறக்கினார் தோனி. 13ஆவது ஓவரில் ஃபோல்டானது த்ரிப்பாட்டியின் விக்கெட். த்ரிப்பாட்டிய ஃபோல்ட் ஆகிட்டு ஜடேஜா கொடுத்த ரியாக்ஷன் இருக்கே, சேட்டைகாரன் ஜடேஜா. 

மிடில் ஓவர்களில் தடுமாறிய கேகேஆர், கடைசியா ரஸல் மற்றும் ராணாவிடம் வந்தது. இருவரும் அடித்து ஆட, அதற்கு செக்மேட்டாக வந்தார் தாக்கூர். 17ஆவது ஓவரில் ரஸல் விக்கெட் விழ ஆட்டம் கண்டது கேகேஆர் அணி. ரஸல் போனதுல சந்தோஷப்பட்ட சென்னை அணி, பின்னாடியே வந்த தினேஷ அசால்ட்டா நினைச்சுட்டாங்க, ஆனா டெத் ஓவர்ஸ்க்கு அவர் கிங் என்று மறுபடியும் நிருபித்தார். அவர் 11 பந்துக்கு 26 ரன்கள் எடுத்து நல்ல ஃபினிசிங்காக இருந்தது கேகேஆர்க்கு. 171 ரன்களை இலக்காக வைத்தது கேகேஆர்.

சென்னை அணி 172 ரன்கள் என்ற இலக்குடன் இறங்க, ருதுராஜ் மற்றும் டூப்ளஸி நல்ல ஆரம்பம் கொடுத்தனர். ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப்ல 72 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 9ஆவது ஓவரில் ரஸலின் பந்துக்கு அவுட்டானது ருதுராஜ் விக்கெட்.

அடுத்து வந்த மொயின் அலி 32 ரன்கள், டீப்ளஸி 43 ரன்கள், ராயுடு 10 ரன்கள் எடுத்த நிலையில், 17 ஓவர் முடிவில் 141 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. 18ஆவது ஓவரின் முதல் பந்திலேயே வெளியேறினார் ரெய்னா. அடுத்து வந்த தோனி வந்த வேகத்தில் ஃபோல்ட் ஆக சென்னை ரசிகர்களுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க, அடுத்து வந்தார் ஆபத்பாண்டவன் ஜடேஜா.

12 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலையில், முதல் 2 பந்துகளுக்கு 2 ரன்களை எடுத்தார்கள் ஜடேஜா மற்றும் சாம் இணையினர். அடுத்த ரெண்டு பால், ஸ்லோ பால் மற்றும் வைட் புல் டாஸில்  தொடர்ந்து 2 சிக்ஸர் 2 ஃபோர்ன்னு தெறிக்க விட்டார் ஜடேஜா. 19 ஓவரில் 22 ரன்கள் கிடைத்தது. 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பால் போட வந்தார் நரைன், முதல் பந்துக்கு சாம் அவிட்டாகிட, அடுத்து வந்த தாக்கூர், நரைனின் 2ஆவது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை, 3ஆவது பந்தில் பாலை பின்புறம் அடித்து ஓடி ஓடியே 3 ரன்களை  ஓடி எடுத்தனர். 3 பந்து 1 ரன் எடுக்கவேண்டும். 4வது பாலும் டாட் பாலாக. 5 வது பாலுக்கு ஜடேஜா எல்பிடபிள்யூ ஆகிவிட. 1 பாலுக்கு 1 ரன் என்று நின்றது ஆட்டம். கடைசி பாலுக்கு வந்த தீபக் சஹர் 1 ரன் எடுத்து சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். 

ஆட்டநாயகன் விருது பெற்ற ஜடேஜா, அந்த விருதை மகள்கள் தினம் சார்பாக, தன் மகளுக்கு சமர்ப்பிப்பதாக நெகிழ்வுடன் கூறினார்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

120 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா!

Admin

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையாக வருமானம் ஈட்டும் நீரஜ் சோப்ரா.!!

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

தோனியை தொடர்ந்து உருவாகிறது “கங்குலியின் பயோபிக்” – ரசிகர்கள் உற்சாகம்

Admin

அரையிறுதியில் வீழ்ந்த இந்திய ஹாக்கி அணி… சோகத்தில் ரசிகர்கள்

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

ரொனால்டோவுக்கு கோகோ கோலா … இவருக்கு பீர் பாட்டில்…யூரோ கோப்பையில் தொடரும் சர்ச்சை

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

ஒலிம்பிக் போட்டியினை மிரட்டும் கொரோனா.. அச்சத்தில் டோக்கியோ

Admin

Leave a Comment