புது டெல்லி:
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் புதுடெல்லியில் கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனாவைப் பரப்பும் கோவிட் 19 வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையாக உருமாற்றங்களை அடைந்து வருகின்றது. இந்த உருமாற்றங்களினால் இந்த வைரஸ்சை ஒழிக்கும் நடவடிக்கைகள் கடினமாகி உள்ளன. இப்படி உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் நாடுகளிடையே எல்லை கடந்து பரவியும் வருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருமாறிய கொரோனாவின் பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க நாட்டில் உருமாற்றம் பெற்ற புதிய வகைக் கொரோனா வைரஸ் ஒன்று இந்தியத் தலைநகர் டெல்லியில் 33 வயது இளைஞர் ஒருவரைத் தாக்கி உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ்சின் பாதிப்பும் டெல்லியில் சில நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உருமாறிய கொரோனாவின் திடீர் படவல் நமக்கு உணர்த்துகிறது.
நமது நிருபர்