தர்மபுரி மாவட்டத்தில் தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் இருந்ததற்காக அம்மனுக்கு கூழ் ஊற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் காப்பாற்றியதாக ஊர் மக்கள் ஒன்று கூடி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை கொண்டாடியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள நெருப்பாண்ட குப்பம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுவரை அந்த கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
இதனால் 101 குடங்களில் மேளதாளம் முழங்க மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அங்குள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது.
மேலும் கூழ் ஊற்றி அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் ஊர் அடங்கை மீறி கூடியதாக இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
– மூவேந்தன்