கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையில் சிக்கி தவிக்கின்றனர். 3 ஆம் அலை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் முன்றாம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ள, விரல்களில் ஆக்சிமீட்டரை பொறுத்தி 6 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வைக்க வேண்டும்.
இதில் குழந்தைகளின் ஆக்சிஜன் அளவு அதீதமாக குறையும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க கூடாது என்றும் கொரோனா தொற்றால் கடுமையான மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஸ்டெராய்டு மருந்துகளை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.