கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர் முதல்வர் ஆற்றிய சுதந்திர தின உரையில், சுதந்திர தின நாளில் முதல்வர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி தான் என நினைவு கூர்ந்தார்.
மேலும் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு தொடங்கி கொரோனா பரவல் வரை அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் சமமான உரிமை அளிக்கும் சமூக நீதி கொண்டாட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்றும், இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு குறித்த ஆவணம் உருவாக்கப்பட்டு முறையான ஆவணத்தை இதற்கான உருவாக்கி அரசு வெளியிடும் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.