சமூக வலைத்தளங்களில் புதிய வரவாக அமைந்துள்ளது கிளப் ஹவுஸ் செயலி. வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பல சமூக வலைதளங்கள் ஏற்கனவே உள்ள நிலையில் இந்த செயலியின் சிறப்புகள் என்னென்ன என்று பார்ப்போம்…
கடந்த ஆண்டே கிளப் ஹவுஸ் செயலி இணையத்தில் அறிமுகமாகி இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
இதில் வீடியோ, போட்டோ ஆகியவற்றைப் பகிர முடியாது. ஆடியோவை மட்டுமே பகிரும் வண்ணம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் ஐயாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் உள்ள இந்த கிளப் ஹவுஸ் செயலியில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாடலாம்.
ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் தலைப்புகளின் கீழ் நடைபெறும் உரையாடல்களில் பங்கு பெறலாம்.
மேலும் Room எனப்படும் இந்த அரட்டை பக்கத்தில் Hand Raising ஐகான் மூலம் உரையாடல்களில் தமது கருத்தை தெரிவிக்கலாம்.
அதேபோல் பயனாளர்கள் தங்களது நண்பர்களுக்கு அது குறித்த விவரங்களை பகிர்ந்து, அவர்களையும் அமர்வில் பங்கேற்க சொல்லி அழைப்பு விடுக்கலாம்.
ஏதேனும் வேலை வந்தால், இதில் இருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியேறவும் ஆப்ஷன்கள் உள்ளன.
இந்த கிளப் ஹவுஸில் ஏற்கனவே கிளப் ஹவுஸ் பயனாளராக உள்ள ஒருவரது அழைப்பு இருந்தால் மட்டுமே உள்நுழைந்து பயன்படுத்த முடியும். இதனை ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதேபோல் இந்த உரையாடல்களை யூடியூப் தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யும் வசதியும் உள்ளது. எனவே இனி நீங்களும் கிளப் ஹவுஸில் இணைந்து ஜாலியாக உரையாடுங்கள்.
– மூவேந்தன்