எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு வைப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து 4 முறை பணம் எடுக்கலாம்.
அதற்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். இந்த நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதேபோல் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நிதி ஆண்டில் 10 காசோலைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் காசோலைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டண அமல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.