பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

SHARE

”பிக் பாஸ் தொடங்கி 40, 50 நாள்ல நடக்க வேண்டியது எல்லாம் இப்பவே நடக்குற மாதிரி இருக்கு. மற்ற சீசன்களை விட இந்த சீசன் ரொம்ப வேகமாவே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது என்று தான் கூற வேண்டும்”  என்ற  அறிமுகத்துடன் அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றார் கமல். வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகள் ஒளிபரப்பாகின. 

சமையல் அறையை கைக்குள் கொண்டு வந்தால், வீட்டையே தன் கைக்குள் கொண்டு வரலாம் என்ற மந்திரம் பிக் பாஸ் வீட்டிற்கும் பொருந்தும். தாமரையின் சமையலை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் பிரியங்கா மற்றும் அபிஷேக். ’சமையல் சூப்பர், இந்த சமையலுக்காகவே உன்ன இந்த வீட்ல இருந்து அனுப்ப முடியாம போயிடுமே’ன்னு பிரியங்கா தாமரையை பாராட்டினார்.  

சமையலை பாராட்டிப் பேசிய உரையாடல், கொஞ்சம் கொஞ்சமாக சண்டையாக மாறியது. ’உப்பு இல்லைன்னு சொல்றதுக்கு சமையல் தெரிஞ்சிருக்கணுமா?’ என்ற இமானின் பேச்சுக்கு, ’நீங்க 16 பேருக்கும் சமைச்சு பாருங்க, உங்களையும் கிச்சன்ல பார்க்க நாங்க ரொம்ப ஆசைப்படுறோம்’ என்று பிரியங்கா மற்றும் பாவ்னி கூறியதில், இமான் மேல் இவர்களுக்கு இருக்கும் காண்டு தெளிவாகவே தெரிந்தது.

இவர்களின் உரையாடலுக்கு சப்போர்ட் பண்ண வந்த, அபிஷேக்கும் ராஜூவும் தங்களுக்குள் முட்டிக் கொண்டனர். அபிஷேக்கும் இமானும் பேசிக்கொண்டிருக்கையில் நடுவே வந்த ராஜூ ’நீங்க பேசாதீங்க’ என்று இமானை தடுக்க… ’நீ அவரை ஏத்தி விடாத… அவரே முடிவு எடுக்கட்டும்” என்று அபிஷேக் ராஜூவிடம் கோபமாகக் கூற, ஏது பெரிய வம்பா போயிடும் போல – என்று இமான் அனைவர் முன்னிலையிலும், ’தப்பு என் மேல்தான் மன்னிச்சிடுங்க’ என்று சொல்லி பிரச்னையை சுமூகமாக்கினார். 

அப்பாடா சமையல் பிரச்சனை இதோடு முடிந்துவிட்டது, என்று அமருவதற்குள், ஆரம்பமனது அடுத்த குட்டி சண்டை. 

லக்ஸரி பட்ஜெட்டில் அவரவர் இது வேண்டும் அது வேண்டும் என்று தேர்ந்தெடுக்கையில்  மீதம் இருந்த 100 பாயிண்ட்ஸ்க்கு என்ன எடுப்பது என்று தெரியாமல், 100 பாயிண்ட்ஸ் வீணானது. இதில் கடைசியாக பிரியங்கா ஸ்நாக்ஸ் வாங்கலாம் என்று கூறினார். ஆனால் இதை பலர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். 

பட்ஜெட்யில் சிக்கன், இறால், முட்டை எல்லாம் இருந்ததால், ’வாரத்துல மூணு நாளும் நான்-வெஜ்ஜா சாப்பிடுவீங்களா?’ என்று பிரியங்கா கேட்டது சரியா என்பதை விட, கேட்ட விதம் சரியில்லை என்றே தோன்றியது. இதை முன்பே பேசி முடிவு எடுத்திருக்கலாம்….. தேவை இல்லாத பிரச்னை.

ஒரு வழியாக அகம் டிவி வழியாக வந்தார் கமல். பஞ்சதந்திரம் டாஸ்க்கில் நாணயத்தின் பயணத்தை கேட்டு, இப்போது யார் யாரிடம் நாணயம் இருக்கிறது என்றும் கேட்டறிந்தார். யார் யார் தனக்காக விளையாடினீர்கள் என்ற கமலின் கேள்விக்கு ’நான் எனக்காகத்தான் விளையாடினேன்’ என்ற ஐக்கியின் நேர்மையான பதிலுக்கு பாராட்டினார். ’எனக்கு விளையாட்டு தான் முக்கியம். அதுக்காக என்னவேணாலும் செய்வேன்’ என்று கூறினார் அபிஷேக். ’இந்த விளையாட்டை நேர்மையாகவும், எந்த வித விதிமீறலும் இல்லாமல் விளையாடுபவராக தெரிகிறீர்கள்’ என்று கமல் ராஜூவையும் பாராட்டினார். 

விளையாட்டில் அடுத்தவர்களின் உதவியை நாடியோ, பயந்தோ விளையாட்டை விளையாடாமல் இருந்த தாமரை மற்றும் இசையை தைரியமாக விளையாடச் சொல்லி அறிவுரை கூறினார் கமல். 

நாணயம் இருக்கிறதா? – என்று பிரியங்கா சின்னபொண்ணுவை சோதித்த பிரச்னைக்கு வந்தது கமலின் அடுத்த கேள்வி. ’கேமுக்காகத்தான் நான் அப்படி செஞ்சேன், அவங்க அனுமதியோடுதான் செஞ்சேன்’ என்று பிரியங்கா பச்சையாக சமாளிச்சாலும், ’ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்கு எது மரியாதையான செயல் என்று தெரிந்திருக்க வேண்டும்…’ என்று கமல் அறிவுரை கூறினார். ஆனால் கமல் இதற்கு அதட்டியே கூறியிருக்கலாம். 

’உங்களுக்கு கோபம் வரவில்லையா சின்னப்பொண்ணு?’ என்ற கமலின் கேள்விக்கு ’இல்ல சார், கேம்தானே…’ என்று சாதாரணமாக பதில் கூறினார் சின்னப்பொண்ணு. எதுக்கு கோபப்படனுமோ அதுக்கு கோபப்படுறது இல்ல, அப்புறம் சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபப்பட வேண்டியது….. கடவுளே…

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததேயில்லை என்று சொன்ன அபிஷேக்கிடம் கமல் ’உங்க விளையாட்டை பார்த்தால் நிகழ்ச்சியை பார்த்தவர் போல் இருக்கிறதே’ என்று கேட்டதற்கு, ’இல்ல சார்,, நண்பர்களோடு காபி குடிக்கும்போது பேசுவோம் சார் அவ்ளோதான் சார்’ என்று கூறிய அபிஷேக்கிடம், ’நிறைய காபி குடிச்சிருக்கீங்க போலிருக்கே’ என்று கமல் கூறியது, அல்டிமேட் நக்கல்…..

அடுத்து கமல் அக்ஷரா, பாவ்னி பிரச்சனைக்கு வந்தார். அதில் இருந்த கருத்துவேறுபாடு பிரச்னையை அவர்களையே பேச வைத்து தீர்த்தும் வைத்தார் கமல். இறுதியில் இருவரும் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும் கூறினார். 

பிக்பாஸ் கமெண்ட்ஸ் மற்றும் மீம்ஸ் எல்லாவற்றையும் நிகழ்ச்சிக் குழுக்கள் கவனித்துக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. இந்த இந்த எபிசோடுகளில் இதெல்லாம் கமல் கேட்கணும் என்று ரசிகர்கள் எதையெல்லாம் எதிர்ப்பார்த்தார்களோ அதை எல்லாம் கமல் கேட்டார். 

அக்ஷராவை குறை சொன்ன பிரியங்காவை சரியான பதிலடியாக ’நீங்க அப்படி செய்ததில்லையா’? என்று கமல் கேட்டது, அந்த எபிசோடில் ரசிகர்களுக்கு தோன்றிய கேள்வி. அதற்கும், ’நான் டாஸ்கில் அப்படி பண்ணவில்லை’ என்று சமாளிச்சு சொன்னார் பிரியங்கா. இப்படி நிறைய தடவை பிரியங்காவின் பல்லை பிடுங்கிவிடணும் என்று தோன்றியது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

அட்டகாசமான “ஆடி ஆஃபர்” … களைக்கட்டும் அமேசான் சிறப்பு விற்பனை

Admin

ஜிப்ஸிக்கள் மகிழ்ச்சியாக இல்லை – மகசூல் -பயணத்தொடர் – பகுதி 11

Pamban Mu Prasanth

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… பாண்டா கரடிக்குட்டிகளின் வைரல் வீடியோ

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

பாலியல் வன்கொடுமை குற்றவாளியை சுட்டுப்பிடித்த சென்னை போலிஸ் – நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

திருஷ்டி பூசணிக்காயாக சன்னி லியோன்… சோகத்தில் ரசிகர்கள்…!

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 10. தாமரை கடந்து வந்த பாதை…

இரா.மன்னர் மன்னன்

கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்! தெறிக்கவிடலாமா? -வலிமை பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

Leave a Comment