பிக் பாஸ் நாட்கள்: நாள் 3. இமான் அண்ணாச்சியின் ‘வானத்தைப் போல…’

SHARE

காலையில் பாட்டு போடுறதுக்குள்ளயே இமான், மதுமிதா, நிரூப் எல்லாரும் எந்துவிட்டார்கள். மத்தவங்களுக்கு தான் வைத்த செல்லப் பெயரை சொல்லிக்கொண்டிருந்தார் அண்ணாச்சி. பிறகு 8 மணிக்கு ஒலித்தது ’வாத்தி கம்மிங்’ பாடல். 3ஆம் நாள் என்பதால் ஓரளவு எல்லோரும் ஆடினர்கள். 

வெளியே பெய்து கொண்டிருந்த மழையை ரசித்து அதில் நனைந்து கொண்டிருந்தார் ராஜீ. அப்டியே ஒரு ஹீரோ ஃபீலிங்கு போயிட்டார். ஐக்கியும், அபிஷேக்கும் மழை தண்ணிய மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டு விளையாடினாங்க. அப்புறம் டைனிங் டேபிள்ல நம்ம சின்னபொண்ணு கானங்கருங்குயிலே பாட அனைவரும் தாளம் தட்டினார்கள். 

அப்புறம் ’ஒரு கத சொல்லட்டுமா சார்…’ டாஸ்க்குக்கு பேச வந்தார் நம்ம இமான் அண்ணாச்சி. மற்றவர்களால் ஏற்பட்ட சினிமா ஆசையையும், சினிமாவுக்காக ஊரைவிட்டு வந்த கதை, 18 வருடத்தில் எந்த சினிமாவும் அழைக்கவில்லை என்பதையும், தனக்கு வாய்ப்பு கொடுத்த சின்ன தொலைக்காட்சியில் தன்னை  100 சதவீதம் நிரூபித்ததால் என் நிலை இன்று மாறியுள்ளது என்றும் அழாமல் சிரிக்க சொன்னது நன்றாகவே இருந்தது. 

கடைசியா, பிக் பாஸ் நிகழ்ச்சில ஒரு காமெடியன் ஜெயிக்கணும், அதனால ஓட்டுகளை அள்ளிப் போடுங்க, இல்லனா வருத்தப்படுவீங்கனு அவர் ஸ்டைல்ல முடிக்க அனைவரும் சிரிப்புடன் கைத்தட்டினர். டிஸ்லைக் கொடுத்த நமீதா சினிமா கதைப்போல் இருக்குன்னும், அக்ஷரா எனக்கு கனெக்ட் ஆகலைன்னும் சொன்னாங்க. இமான் பேசிக்கொண்டிருக்கும் போது நிரூப் சிரித்ததற்கு நிரூப்புக்கும் சிபிக்கும் மத்தியில் சின்ன சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அது செல்ஃப் எடுக்கவில்லை. பார்ப்பதற்கு .என்ன புஸ்ன்னு முடிச்சிடாங்க’ன்னு இருந்தது. கடைசியில் அண்ணாச்சி ’அது என் கதையே இல்லல, வானத்தைப்போல படத்தோட கதைல போங்கல’ன்னு சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிட்டாரு. 

படுக்கையில் அபிஷேக் ஐக்கீயையும், சிபியையும் ரிவ்யூ செய்யுறன்னு பேச, அங்க வந்து உக்காந்ததுக்கு தாமரைய பாத்து பட்டைய போட்டு ஊர ஏமாத்துதுன்னு சொல்ல, அதுக்கு தாமரை பட்டைய பத்தி பேசினா எனக்கு கோவம் வந்துடும்னு சொல்ல, அதுக்கு அபிஷேக்  தாமரை காலிலேயே விழுந்து எங்க இப்போ பேசு, பேசுனு சொல்ல சிரிச்சுக்கிட்டே ஓடிடாங்க தாமரை. 

‘ஒரு கத சொல்லட்டுமா…’ டாஸ்க்கில் அடுத்து வந்தவர் சுருதி. ஆரம்பிக்கும் போதே அழ ஆரம்பித்து விட்டார். தன் அம்மாவின் கஷ்டங்களை பத்தியும், தன் அப்பாவினால் ஏற்பட்ட கஷ்டங்களை பத்தியும் சொன்னார். அவரது கதை கற்பனைக்கும் அப்பாற்பட்டது. ஒரு பெண் தன் அப்பாவின் இறப்பிற்கு சந்தோஷப்படுகிறாள் என்றால் அவளின் துயரம் கேட்பவருக்கே கண்கலங்க வைத்தது. 

அந்த கஷ்டத்திலிருந்து தான் மீண்டது, குடும்ப பொறுப்புகளை சமாளித்து, விளையாட்டில் தன்னை மெருகேற்றி, தற்செயலாக கிடைத்த மாடல் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தியது எல்லாத்தையும் சொல்லி, ‘இதுக்கெல்லாம் பின்னாடிதான் நான் உங்க முன்னாடி நிக்குறேன், உங்க வாழ்க்கையில ஒவ்வொரு முடிவும் யோசிச்சு எடுங்க, நோ சொல்ல வேண்டியதுக்கு தயங்காம நோ சொல்லுங்க’-ன்னு முடிக்க இசைவாணி கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். இதனால் சுருதிக்கு டிஸ்லைக்கே இல்லாமல், ஹார்ட்டுகள்  மற்றும் லைக்குகளே கிடைத்தது.   

பிறகு வெளியே உள்ள வரவேற்பறையில் பெண்களின் பூனை நடையை ரசித்து கொண்டிருந்தனர் ஆண்கள். பின் கிச்சனில் பிரியங்கா பிக் பாஸையும், விஜய் டிவியையும்  மொக்கையாக கலாய்க்க, அதற்கும் சிரித்துக் கொண்டிருந்தார் நிரூப். 

டைனிங் டேபிளில் தாமரை பிரியங்காவை கலாய்க்க, இப்படியெல்லா, பண்ணா நாமினேஷன்ல போட்ருவனு சொல்ல, அதற்கு தாமரை நாமினேஷன்னா என்னன்னு கேக்க, வீட்டை விட்டு வெளிய அனுப்பிடுவாங்கன்னு சொல்ல, அதுக்கு தாமரை ‘அய்யோ பிக் பாஸ் இப்ப தான் நான் சந்தோஷமா இருக்கேன், நல்லா சாப்பிடுறேன், நல்லா தூங்குறேன் என்ன வெளிய அனுப்பிடாதீங்க’ன்னு குழந்தைதனமா சொல்ல… நாள் முடிந்தது.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

Leave a Comment