- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: சே.கஸ்தூரிபாய்
ஐபிஎல் தொடரின் 6ஆவது ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால் அந்த அணியின் கேப்டன் கோலி எச்சரிக்கைக்கும் ஆளானார்!. சேப்பாக்கம்: நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 6வது ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் சன்ரைசர்ஸின் மோசமான ஆட்டத்தால் ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இந்த ஐ.பி.எல். தொடரில் இதற்கு முந்தைய மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தில் எப்படி கடைசி 5 ஓவரில் ஆட்டமே மாறி மும்பை இண்டியன்ஸ் வசம் சென்றதோ அதே…
ஐபிஎல் டி20 லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதினர். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை இண்டியன்ஸ் அணி. சேப்பாக்கம் முதலில் பேட்டிங் செய்தது மும்பை இண்டியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள் ரோஹித் ஷர்மா மற்றும் காக். ரோஹித் ஷர்மா எப்போதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சிடம் அதிரடியான ஆட்டத்தை ஆடுபவர், என்னென்றால் இதற்கு முன்பு நடந்த அனைத்து ஐபிஎல் போட்டியிலும் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் 939 ரன்களை அடித்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. அதே போல் ஒரு ஆட்டத்தை தான் நேற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் ஏமாற்றமே மிச்சம். நேற்றைக்கு ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் சுமாராகவே இருந்தது. 32 பந்துகளில் 43 ரன்களை எடுத்து பேட் கம்மின்ஸ் பந்தில் அவுட்டாகினார் ரோஹித் ஷர்மா. அதற்கு பிறகு வந்த…
நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது!. மும்பை: ஐபிஎல் டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதியது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதனால் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்கத்தில் களம் இறங்கிய டூபிளேஸிஸ் மற்றும் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதற்கு பிறகு வந்த ரெய்னா மற்றும் மொயின் அலி ஜோடி நன்றாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். ”வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”-…
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் முதலாவது ஆட்டம் மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறுகிறது. மும்பை: ஐபிஎல் டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டம் இன்று மாலை 6 மணி அளவில் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டிகளின்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேல் ரசிகர்களுக்கு இருந்த பெரிய எதிர்பார்ப்பு இந்த முறை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் தனது மோசமான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு செல்லாமலேயே வெளியேறியதே இதன் காரணம். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை சில முக்கியமான மாற்றங்களோடு களம் இறங்க உள்ளது. அதில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது ரெய்னாவின் வருகை, இதனால் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் ஆட்டத்தை சென்னை அணியால்…
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. சென்னை: 2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கின. தொடரின் முதலாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஹர்ஷல் படேல் எடுத்த 5 விக்கெட்களும், டிவில்லியர்ஸின் வழக்கமான அதிரடி ஆட்டமும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தன. 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருனல் பாண்டியா, ஜான்சென் ஆகிய 5 பேரின் விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் ஆனார் படேல். டிவில்லியர்ஸ் 27 பந்துகளில் 48 ரன் எடுத்து RCB யோட இக்கட்டான…