- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ்ஆப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கன மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில், பொது மக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்தான தகவல்களை தெரிவிக்க பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ் அப் எண் அளிக்கப்பட்டுள்ளது. தங்களது பகுதிகளில் நிகழும் பேரிடர்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 94458 69848 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் மட்டுமல்லாது, இணையம் உபயோகிக்காத மக்கள் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பேரிட ர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள மக்கள் களம் என்ற தளத்தில் புகைப்படத்துடன் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே,எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.- மூவேந்தன்
பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இன்னல்களை குறைக்கும் வகையில் மக்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.அந்த வகையில் பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் குறித்து அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல், பதிவு செய்யப்படுவது சட்டமாக்கப்பட்ட ஒன்று. இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை கால தாமத கட்டணம் ரூபாய் 100 ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டுக்குள் கால தாமத கட்டணம் ரூபாய் 200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் கால தாமத கட்டணம் ரூபாய் 500 ஆகவும் உள்ளது. இந்த கட்டண முறையானது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் கட்டணத்தில்…
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் குறித்து வெளியான அப்டேட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ள படம் “ஜகமே தந்திரம்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையத்தளத்தில் வெளியாகிறது. படத்தின் அனைத்துப் பாடல்களும் நேற்று வெளியான நிலையில், ‘புஜ்ஜி’ மற்றும் ‘நேத்து’ ஆகிய இரண்டு பாடல்களும் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த 2 பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைக்கு இணங்க டுவிட்டர் தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மையை காக்கும் வகையில், சமூக வலைத்தளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு புதிய டிஜிட்டல் கொள்கையை விதித்து, அதற்கு இணங்கும்படி மத்திய அரசு 3 மாத கால அவகாசம் வழங்கியது. இதைத்தொடர்ந்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்தாலும், பயனாளர்களின் தனிஉரிமை பறிக்கப்படுவதாக டிவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.டுவிட்டருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, கடந்த வாரம் இறுதி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், புதிய விதிகளுக்கு கீழ்ப்படிவதாக டுவிட்டர் தெரிவித்தது. மேலும் கொரோனா சூழல் காரணமாக இறுதி முடிவினை எடுக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் டுவிட்டர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.- மூவேந்தன்
பயனாளர்களின் சுதந்திரத்தை பறிக்கும் விதமாக கூகுள் செயல்படுகிறது என புகார் தெரிவித்து கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் அரசு 22 கோடி யூரோ அபாராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய ஊடகங்களான நியூஸ் கார், பிரஞ்சு டெய்லி பெல்ஜியம், குரூப் ரசல் ஆகியவை கூகுள் மீது புகார் தெரிவித்தன. அதில், விளம்பரங்கள் மூலமாக தங்கள் ஆன்லைன் தளங்களை கூகுள் நிறுவனம் தொந்தரவு செய்வதாகவும் வாடிக்கையாளர்களுக்கு இது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கூகுள் தேடுதளத்தில் நாம் ஒரு ஆன்லைன் வர்த்தகப் பொருள் குறித்த தேடினால் அந்தப் பொருள் நாம் செல்லும் இடமெல்லாம் பின்தொடரும் என்பது நாம் அறிந்த ஒன்றே. இதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் இணைய கட்டுப்பாட்டு அமைப்பு இதனை சோதனை செய்து கூகுளுக்கு 22 கோடி யூரோ அபராதம் விதித்துள்ளது.- மூவேந்தன்
தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், காய்கறிகள்,மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ரேஷன் கடைகளும் கீழக்காணும் பணி நேரத்தின்படி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 8 ஆம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த நேரம் மாற்றம் அமலுக்கு வருவதாகவும், இது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா நிவாரண நிதி இரண்டாம்…
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் போட்டி நடத்தப்படும் என்பது முடிவாகாத நிலையில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி ஒருநாள் போட்டிகளில் முதல் ஆட்டம் ஜூலை 13 ஆம் தேதியும், 2-வது ஆட்டம் ஜூலை 16 ஆம் தேதியும், 3-வது ஆட்டம் ஜூலை 18 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஜூலை 25 ஆம் தேதி முடிவடைகிறது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முன்னணி இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதால் இலங்கை தொடருக்கு இளம் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த தொடரின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போதைய தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே அமைந்துள்ளதால், அவற்றை அனைவருக்கும் செலுத்தும் பணியில் மத்திய,மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஸ்புட்னிக் வி உள்ளிட்ட சில தடுப்பூசிகளும் அடுத்தடுத்து பயன்பாட்டுக்கு வர உள்ளன. டாக்டர் ஏ.கே.சிங் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்காக 515 சுகாதார ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இதனை மருத்துவத்துறையினர் ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூவேந்தன்
அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் நீட் தேர்வால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் அநீதி நடைபெறுகிறது. புள்ளிவிவரங்களின் படி, கடந்த 15 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்களே மருத்துவக் கல்லூரியில் சாதித்துள்ளனர் ஆனால் அவர்களுக்கு நீட் தேர்வினால் அநீதி அதிகரித்துள்ளது. இதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டும் அரசுப் பள்ளியில் படிக்க 405 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. ஆகவே இது போன்ற அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அநீதியை போக்குவதற்கான முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு மாற்றாக வேறு எந்த வகையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து அரசு…
டெல்லியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றன. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கை அமல்படுத்தினார்.தற்போது டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து இன்று தளர்வுகளை அறிவித்தார். மேலும், டெல்லியில் இருக்கும் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருவதில்லை. இதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் வீடு வீடாக சென்று அதிகாரிகள் தடுப்பூசி பணியை மேற்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த பணி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த வதந்தியை போக்கும் விதத்தில் விழிப்புணர்வுகளை…
