- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளின் விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்கியுள்ளார். ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து முன்னாள் அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவுகள் பலவற்றை நீக்கி வருகிறார். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனத்திற்கு மீண்டும் அமெரிக்கா நிதி வழங்குதல் போன்ற கோப்புகளில் கையெழுத்திட்டார். மெக்சிகோவிலிருந்து அகதிகள் நுழையாமல் தடுக்க நீண்ட எல்லை சுவர் கட்டும் பணிகளை நிறுத்தினார். அந்த வகையில் சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் ஜோ பைடன், டிக் டாக், வீ சாட்டிற்கு எதிரான டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்து கையெழுத்திட்டுள்ளார். அதே சமயம் அந்த செயலிகளின் பாதுகாப்பு பபற்றி ஆராய உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் தமிழகத்தில் கடந்த ஜூன்-7ம் தேதியுடன் முடிந்தது. அந்த நிலையில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. அப்போது ஜூன்-14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மீண்டும் ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் குறித்தும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசிக்க உள்ளார் இந்த கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர். மூவேந்தன்
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு வறுத்த டவல் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பிரபல உணவகம் ஒன்றில் அலிக் பெரெஸ் என்ற பெண் தனது மகனுக்கு வறுத்த கோழி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். புக்கிங்கில் காட்டப்பட்ட படமும் பார்ப்பதற்கு வறுத்த கோழி போன்றே இருந்து உள்ளது. ஆனால் உணவு டெலிவரி ஆன பிறகு அவரது மகனால் அதை கடித்து சாப்பிட முடியவில்லை.வெட்டவும் முடியவில்லை. அப்போது தான் அது ஒரு டவல் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இந்த சம்பவத்தை வீடியோவாக அந்த பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட இதுவரை 2.5 மில்லியன் பேர் அதனை பார்த்துள்ளனர். இதனையடுத்துஅந்த உணவகம் தனது கிளைகளை தற்காலிகமாக மூடி உள்ளது. அதேசமயம் விற்பனை நிலையங்களில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.- மூவேந்தன்
இயக்குநர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் இன்று வைரலாக பரவி வருகிறது. 2.0 படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். மிகுந்தபொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுற்ற பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன் தற்போது தனுஷின் 43-வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.- மூவேந்தன்
செல்ஃபி மோகத்திற்கு எதிராக அறிமுகமாகியுள்ளது பாப்பரஸி செயலி. இணையத்தை கலக்கி வரும் இதன் சிறப்புகளை காண்போம். சமூகத்தில் நிறைந்திருக்கும் செல்பி மோகம் நாம் எப்போதும் நன்றாக, அழகாக தோற்றம் தர வேண்டும் எனும் அழுத்தத்தில் நம்மை இழுத்துச் செல்கிறது என்றே சொல்லலாம். அதற்கு எதிராக புகைப்படம் எடுத்து பகிர்வதற்கான செயலியாக பாப்பரஸி உள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் யாரும் தங்களை செல்ஃபி படம் எடுத்து பகிர்ந்து கொள்ள முடியாது. அதற்கு பதிலாக மற்றவர்கள் நம்மை எடுக்கும் படத்தைத் தான் பகிர முடியும். இதில் இணைய கிளப் ஹவுஸ் செயலி போல நண்பர்கள் துணை தேவை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். முதற்கட்டமாக ஐபோன்களில் செயல்படும் வகையில் அறிமுகம் ஆகியுள்ள பாப்பரஸி செயலி விரைவில் அனைத்து வித இயங்கு தளங்களிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.- மூவேந்தன்
பிரபல நடிகை கங்கனா ரனாவத், வேலை இல்லாத காரணத்தால் கடந்த வருட வருமானவரியின் பாதித்தொகையை செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் தனது வருமானத்தில் 45 சதவீதத்தை வரியாக செலுத்தி வருகிறார். சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட அவர், கொரோனா கட்டுப்பாடு காரணமாக படப்பிடிப்பின்றி வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், வேலை இல்லாததால், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் பாதியை மட்டுமே செலுத்தி இருப்பதாகவும், வரி செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் தனக்கு வட்டிக்கு மேல் வட்டி போடப்படுவதாகவும் கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.மத்திய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவிட்டு வந்த கங்கனா ரனாவத் முதன்முறையாக இப்படி ஒரு பதிவை இட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. கங்கனா நடிப்பில் பன்மொழியில் உருவாகியுள்ள தலைவி திரைப்படம், கொரோனா காரணமாக திரையிடுவதில் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.- மூவேந்தன்
ஆதிகாலம் முதலே நமக்கும் யானைகளுக்கும் ஒரு பந்தம் உள்ளது. அந்த வகையில் சீனாவின் நகர் பகுதியில் திரிந்த யானைகள் தங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் மக்களால் ஈர்க்கப்பட்டு வைரலாகி வருகின்ரது. சீனாவில், நகர் பகுதிகளுக்குள் சுற்றித்திரிந்த யானைகள் கூட்டம் ஓய்வெடுத்த புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. வனப்பகுதிகளில் உணவின்றி தவித்த 15 காட்டு யானைகள், அண்மையில் சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள நகர் பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதைத்தொடர்ந்து அவற்றை விரட்டி அடித்த கிராம மக்கள், அரசு அதிகாரிகள் உதவியுடன் டிரோன் மூலம் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் சுமார் 500 கிலோ மீட்டர் ஒய்யார நடையிட்ட இந்த காட்டு யானைகள் அங்குள்ள வனப்பகுதியில் படுத்துறங்கி ஓய்வெடுத்த காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதிலும் அந்த குட்டியானை மாட்டும் தூங்காமல் தனது தாயிடம் குறும்பு செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மனிதர்களைப் போலவே குடும்ப…
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபின் வழங்கப்படும் சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள ஹாட்ஸ்பாட் இடங்களை கண்டறிய உதவும் ஆரோக்கியசேது (Arogya setu)செயலி இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் இருப்பின், கோவின் இணையதளத்துக்கு சென்று login செய்து, திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து திரையில் தெரியும் ‘கரக்ஷன் இன் சர்டிபிகேட்’ என்பதை கிளிக் செய்து திருத்தம் செய்யலாம். பெயர், பாலினம், பிறந்த தேதி இவற்றில் ஏதாவது இரண்டில் மட்டுமே திருத்தம் செய்ய முடியும் எனவும், அதுவும் ஒரே ஒரு முறை தான் இந்த திருத்தம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தம் செய்த பின் புதிய சான்றிதழை கோவின் தளத்திலேயே பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.- மூவேந்தன்
கொரோனாவால் உயிரிழந்த குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுக்கப்படுவதை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக கொரோனாவின் தாக்கம் கோரதாண்டவம் ஆடியது. பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் போராடி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது, இதுவரை 107 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அரசு காப்பகங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை வைத்து தனியார் தொண்டு நிறுவனங்கள் நிதிபெறுவதையும், குழந்தைகள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை கொஞ்ச நாட்களாக காணவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில்: தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி மருத்து இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன் 2 -ஆம் தேதியிலிருந்து நாட்டின் பல மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைக்கு முழுகாரணாம் மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு கொள்கைகள் தான் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாள்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என்று சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
