கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கோஷமிடுவது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கோஷ்டி மோதல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து அவரின ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
இது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கட்சி அலுவலகத்தில் மறைந்த முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் சொல்லி கோஷமிட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்