தமிழ்நாட்டில் இனி ஊடகவிவாதங்களில் பங்கேற்க கூடாது என்ற முடிவை அதிமுக எடுத்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்
கழக தலைவர்களின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தலைப்புகளை வைத்து ஊடகங்களில் விவாதங்களை நடத்துகிறார்கள்.
எங்களுக்கு இது மன வருத்தத்தை கொடுக்கிறது. எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதனால் அதிமுக இனி ஊடக விவாதங்களில் ஈடுபடாது என கூறியுள்ளனர்.
மேலும், அதிமுகவின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டும் யாரையும் ஊடக விவாதங்களில் அடையாளப்படுத்த வேண்டாம் .
அதிமுகவின் பெயரை எந்த வகையிலும் பிரதி பலிக்கும் வகையில் யாரையும் விவாதத்திற்கு அழைக்க வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்