முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் சாந்தினி. மலேசிய குடியுரிமை பெற்ற இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
அதில், மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக ஐந்து வருடங்கள் வாழ்ந்ததாகவும் மூன்று முறை கர்ப்பம் அடைந்து அவர் மிரட்டலால் அதை கலைத்ததாகவும் கூறியிருந்தார்.
தற்போது திருமணம் பற்றி பேசினால் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.இந்த புகார் மனு மீது அடையாறு மகளிர் போலீசார் விசாரித்து, மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு, நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதன் மீதான விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது