வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
அதில் பல்வேறு புதிய திட்டங்களையும் அதற்கான நிதி அளவையும் அறிவித்துள்ளார்.அதேபோல் டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகள் நலனுக்காகவும், தென்னை விவசாயம் வளர்ச்சி அடைவதற்காகவும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல அலுவலகம் தொடங்கப்படும் என அறிவித்திருப்பது விவசாயிகளிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் :
விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்கு உரியது. வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் என பதிவிட்டுள்ளார்.