2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார்.
துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்:
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.
காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.
தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.
நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.
மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.
குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.
மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.
மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.
சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.
விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.