எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

SHARE

தொடர்ந்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு வருவதால் தன்னால் இரவு நேரஞஉறங்கக் கூட முடியவில்லை என அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன.

வரும் 13ம் தேதி வரை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த 16 நாள்களாக பெகாசஸ் ஒட்டுக் கேட்பு, வேளாண் சட்டம் திரும்ப பெறுதல் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால்,

தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில் பெகாசஸ் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் முழக்கங்களை எழுப்பினர்.அமளிக்கு மத்தியில் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில், ஆனால் சில மாநிலங்களவை உறுப்பினர் நேற்று மேஜை மேல் ஏறியதன் காரணமாக அதன் அனைத்து புனிதமும் அழிக்கப்பட்டது என்று வேதனை தெரிவித்தார்.

இதனால் நேற்று இரவு என்னால் உறங்கக் கூட முடியவில்லை என்றும் இது போன்ற அவையை நடத்த தாம் விரும்பவில்லை என்றும் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசினார்.

மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இத்தகைய செயல்களை கண்டிப்பதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.இதனையடுத்து மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவுக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

Admin

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

Admin

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

Leave a Comment