இ-ருபி என்ற ரசீது முறை பணப் பரிவா்த்தனை வசதியை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.
கொரோனா காலகட்டத்தில் இணையவழி பணப் பரிவா்த்தனையின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பணப் பரிவா்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இ-ருபி என்ற புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்த புதிய வசதியின்படி, இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் வாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது, இந்த புதிய சேவை பணப்பரிவர்த்தனை வசதி மக்களிடம் வெளிப்படைத் தன்மையை கொண்டதாக இருக்கும் எனவும், மக்கள் மத்தியில் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தும் வகையில் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்