மன்னிச்சுடுங்கள் அடுத்தமுறை கப் நமக்கு தான்: தமிழக ஒலிம்பிக் வீராங்கனை உருக்கம்!

SHARE

அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில் பவானி தேவி டோக்கியோ மாநகரில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீராங்கனையாவார். முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் இவர் வென்றார்.

இதனால் இரண்டாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியது. இரண்டாவது போட்டியில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டுடன் மோதினார். அவருடன் 7/15 என்ற கணக்கில் தோல்வியினை தழுவினார் இதனால் வாள்வீச்சில் இந்தியாவிற்கான பதக்க கனவு கலைந்தது.தனது தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவி மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில், ” இது எனக்கு மிகப் பெரிய நாள். உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். நான் என்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஊக்கமளித்தஅனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை… தெற்கு ரயில்வே அறிவிப்பு

Admin

குழந்தைக்குப் பால் கூட கிடைக்கவில்லை: காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியப் பெண்ணின் வேதனை

Admin

பெண்களை மதிப்பவரை நியமியுங்கள்: -ஓபிஎஸ் கோரிக்கை..!

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

கேஜிஎஃப் – 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

Leave a Comment